குழந்தை மகவேற்பு

Help Us Spread the Word!

சிறுவர்களின் சிறந்த பாதுகாவலர் நீதிமன்றம் ஆகும். மேலும் சிறுவர்களின் சிறந்த நலன் மற்றும் அபிவிருத்திக்கான அனைத்து அவசியமான ஏற்பாடுகளையும் செய்வதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது.

பொதுச்சட்டத்தின் கீழ் குழந்தையொன்றை சட்டபூர்வமாக மகவேற்பு செய்வதனை நிர்வகிக்கும் நியதிச் சட்டமாக 1941 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க குழந்தை மகவேற்பு கட்டளைச் சட்டம் காணப்படுகின்றது. இச்சட்டத்தின் சட்ட ஏற்பாடுகள் குழந்தை ஒன்றை சட்டபூர்வமாக மகவேற்பு செய்வதற்கான சட்ட தேவைப்பாடுகளை குறிப்பிடுகின்றன.

மகவேற்பு நடபடிமுறையை ஆதரிப்பதற்கும் உத்தரவை வழங்குவதற்கும் மாவட்ட நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் காணப்படுகின்றது.


அத்தகைய கோரிக்கையானது சுருக்க நடபடிமுறையின் கீழ் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் நியாயாதிக்க எல்லையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அத்தகைய கோரிக்கையில் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் குழந்தையின் வயது 14 வருடங்களுக்கு குறைந்ததாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரருக்கும் குழந்தைக்கும் இடையிலான வயது இடைவெளி 21 வருடங்களுக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.


மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் குழந்தையொன்றை வளர்த்தெடுப்பதற்கான நிலையான பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார சூழல் ஒன்று காணப்படுவதான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் நீதிமன்றமானது சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள நன்னடத்தை அதிகாரியிடமிருந்து அறிக்கைகளை வரவழைப்பதன் மூலம் இதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கும்.


குழந்தை ஒன்று விண்ணப்பதாரர்களால் அல்லது நன்னடத்தை திணைக்களத்தின் பதிவில் பதிவு செய்யப்பட்ட அனாதை இல்லத்தின் கோரிக்கையின் மூலம் செய்யப்படலாம்.


குழந்தை ஒன்று மகவேற்பு செய்யப்படும் போது குழந்தையின் இயற்கை தாய் மற்றும் தந்தை அவர்களது சம்மதத்தை வெளிப்படுத்த வேண்டும். நெறிமுறையற்ற குழந்தையொன்றின் விடயத்தில் இயற்கை தாயின் சம்மதம் அவசியம். குழந்தையானது அனாதை இல்லமொன்றின் அல்லது அரசு இல்லத்தின் கட்டுக்காவலின் கீழ் இருக்கும் போது சம்பந்தப்பட்ட பாதுகாவலரின் வெளிப்படையான சம்மதம் அவசியம். மேலும் நீதிமன்றம் குழந்தையின் சம்மதத்தை விசாரிக்கும். விண்ணப்பதாரர்கள் குழந்தையை மகவேற்பு செய்வது தொடர்பாக எந்தவொரு நபருக்கும் அல்லது அமைப்பிற்கும் பணம், வெகுமதி அல்லது பெறுமதியை வழங்கவோ அல்லது வழங்குவதாக வாக்குறுதி அளிக்கவோ கூடாது மற்றும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


குழந்தையின் சிறந்த நலன் மற்றும் நல்வாழ்வு, விண்ணப்பதாரர்களின் சட்ட ரீதியான கோரிக்கை மற்றும் அதிலுள்ள உண்மை தன்மை என்பவற்றை கவனத்தில் கொண்ட பின்பு நீதிமன்றம் மகவேற்பு தொடர்பான கட்டளையை வழங்கும்.


எனவே, மகவேற்பு வழக்கில் குழந்தை விண்ணப்பதாரரான தந்தையின் குடும்ப பெயரை பெற உரித்துடையது. மேலும் விண்ணப்பதாரர்கள் குழந்தையின் பெயராக அவர்களுக்கு விருப்பமான பெயரொன்றை வைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தையின் தந்தை மற்றும் தாய் என்ற அடிப்படையில் விண்ணப்பதாரரின் விபரங்களை உள்ளடக்கியதாக குழந்தைக்கான புதிய பிறப்புச் சான்றிதல் ஒன்றை வழங்குமாறு நீதிமன்றம் பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிடும்.


மகவேற்பின் பின்னர் விண்ணப்பதாரர்கள் குழந்தையின் இயற்கை பெற்றோராக கவனத்தில் கொள்ளப்படுவதோடு சம்பந்தப்பட்ட குழந்தை தொடர்பான அனைத்து உரிமைகளுக்கும் அவர்கள் உரித்துடையவர்களாவர். மேலும் மகவேற்பு செய்யப்பட்ட குழந்தைக்கு பெற்றோர் மற்றும் பரம்பரை தொடர்பான அனைத்து உரிமைகளும் காணப்படுகின்றன.


இங்கே நியதிச் சட்டம் பல முக்கியமான விடயங்களை கவனத்தில் கொள்கிறது.


அவையாவன;

  1. விண்ணப்பதாரர்களுக்கும் முன்மொழியப்பட்ட குழந்தைக்கும் இடையில் தேவைப்படும் வயது வித்தியாசம் 21 வருடங்களுக்கு மேற்பட்டதாகும் என்பது பின்வரும் சூழ்நிலைகளில் மாறுபடும்.
  • குழந்தை விண்ணப்பதாரரின் நேரடி வழித்தோன்றலாக இருக்கும் போது மாறுபடும்
  • குழந்தை விண்ணப்பதாரரின் முழு அல்லது ஒன்றுவிட்ட சகோதரர் அல்லது சகோதரியாக இருக்கும் போது
  • குழந்தை விண்ணப்பதாரரின் மனைவி அல்லது கணவனுக்கு மற்றுமொறு திருமணத்தின் மூலம் கிடைத்த குழந்தை ஒன்றாக இருக்கும் போது
  1. விண்ணப்பதாரர் ஆணாக இருக்கும் போது, பெண் குழந்தை ஒன்றை மகவேற்பு செய்ய விரும்பினால் நீதிமன்றம் முன்மொழியப்பட்ட குழந்தையை மகவேற்பு செய்வதற்கு அனுமதி வழங்காது. ஆனால் அவர்களுக்கு இடையில் விசேடமான உறவொன்று இருந்தால் நீதிமன்றம் விடயங்களை கவனத்தில் கொண்டு உத்தரவு ஒன்றை வழங்கும்.
  2. விண்ணப்பதாரரான கணவன் மற்றும் மனைவி இவரும் உயிருடன் இருக்கும் போது ஒருவர் மாத்திரம்
  • ஒரு தரப்பை கண்டுபிடிக்க முடியாவிட்டால்
  • அவர்கள் விவாகரத்தானவர்களாக இருந்தால்
  • ஒரு வாழ்க்கை துணை மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால்

இல்லை எனில், மற்றைய வாழ்கைத்துணையின் சம்மதம் இன்றி மகவேற்பு செய்வதற்கான உத்தரவு வழங்கப்படாது.


குழந்தை ஒன்றின் மகவேற்பு தொடர்பாக குழந்தையின் சிறந்த நலன் என்ற எண்ணக்கரு மகவேற்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 04 இல் விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது பிள்ளையின் சிறந்த உள மற்றும் ஆரோக்கிய நலன்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் மற்றும் உள ஆரோக்கியத்தின் அடிப்படையில் உயிரியல் தாயின் குழந்தையுடனான பிணைப்பு கருத்திற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் குழந்தை அதன் விருப்பத்திற்கு மாறாக ஒருபோதும் அவளிடமிருந்து பிரிக்கப்பட மாட்டாது. தாய் டிமென்ஷியா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் அக்குழந்தையின் கட்டுக்காவல் மற்றும் உரிமை என்பன சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிமன்றத்திடம் காணப்படும்.


வெளிநாடொன்றில் வாழ்கின்ற வெளிநாட்டு பெற்றோரும் இலங்கையை சேர்ந்த குழந்தையொன்றை மகவேற்பு செய்யலாம். அது தொடர்பாக தனித்துவமான மற்றும் விசேடமான நடபடிமுறை ஒன்றுள்ளது. சம்பந்தப்பட்ட குழந்தை அரச சிறுவர்கள் இல்லமொன்றில் வாழ வேண்டும் மற்றும் அனாதைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


குழந்தை ஒன்றை மகவேற்பு செய்ய விரும்பும் பெற்றோர் அவர்கள் வாழ்கின்ற நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக செல்ல வேண்டிய சில நடபடிமுறையிலான நடவடிக்கைகள் காணப்படுகின்றன. அக்குழந்தையை மகவேற்பு செய்ததன் பின்னரும் கூட 10 வயதை அடையும் வரைக்கும் பின்தொடரப்படும்.


கண்டிய சட்டம் மற்றும் தேசவழமைச் சட்டம் என்பவற்றின் அடிப்படையில் மகவேற்பு தொடர்பான நடபடிமுறை மற்றும் மகவேற்பு செய்யப்பட்ட குழந்தையின் சட்ட உரிமைகள் தொடர்பில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. தேசவழமைச் சட்டம் அல்லது கண்டிய சட்டம் அல்லது முஸ்லிம் சட்டம் அல்லது நடைமுறையில் உள்ள துணைச் சட்டங்கள் அல்லது மரபுகள் ஒருபோதும் பொதுச்சட்டத்தை மீறிச் செயற்பட மாட்டாது.

Source: Women In Need


Help Us Spread the Word!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன