2005ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க குடும்ப வன்முறைச் செயல் தடுப்பு திட்டம்இ குடும்ப வன்முறைகளைத் தடுப்பதற்கான விதிகளைக் கொண்டுள்ளது.

Help Us Spread the Word!

குடும்ப வன்முறை

1.உடல்ரீதியானது – தண்டனை சட்டவிதிகள் அத்தியாயம் 16 இல் குறிப்பிட்டதன் அடிப்படையில் மனித உடலுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள்

2.மனரீதியானது – உணர்வுரீதியிலாக ஏற்படுத்தும் வதையினால் உண்டாகும் மனவதிர்ச்சி

இந்த சட்டத்தின் பிரதான நோக்கமாகஇ குடும்ப வன்முறையினை உடனடியாக தீர்ப்பது காணப்படுகின்றது.

யார் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்?

பாதிக்கப்பட்ட தரப்பினர்இ குறிப்பாக குழந்தையொன்று பாதிக்கப்பட்ட தரப்பினராக இருந்தால்இ குழந்தையுடன் வசித்து வருகின்ற பெற்றோர்ஃபாதுகாவலர் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் அங்கீகாரம் பெற்ற அதிகாரி ஒருவர் விண்ணப்பத்தை பொலிஸில் சமர்ப்பிக்க முடியும்.

யாருக்கு எதிராக விண்ணப்பம் உருவாக்கப்பட முடியும்?

1.குறிப்பிட்ட நபரின் துணை


2.முன்னாள் துணை


3.இணைந்து வாழ்கின்ற துணை (ஊழாயடிவைiபெ ளுpழரளந)


4.பெற்றோர்கள்ஃபெற்றோர்களின் உடன்பிறந்தவர்களின் பெற்றோர்கள் (Pயசநவெள ழக Pயசநவெள ளுiடிடiபௌ)ஃசகோதரிகள் மற்றும் விண்ணப்பதாரருடன் நெருங்கிய குடும்ப உறவைப் பேணும் அவர்களின் பிள்ளைகள்

எங்கே? எப்போது விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட முடியும்?

குடும்ப வன்முறைச் செயல் நடந்தால் அல்லது அதற்கான வாய்ப்பிருந்தால் உடனடியாக குடும்ப வன்முறையைத் தடுக்க இது தொடர்பிலான கோரிக்கையை பாதிக்கப்பட்ட தரப்பினர் அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் வசித்து வருகின்ற இடத்தில் காணப்படுகின்ற மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். இதற்கு வன்முறைச் செயல் நடந்த/நடக்க கூடிய சாத்தியமான இடத்தில் அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினர் தற்காலிகமாக வசிக்கின்ற இடத்தில் காணப்படும் மஜிஸ்திரேட் நீதிமன்றங்களும் பொருத்தமாக இருக்கும்.

விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நீதிமன்றம் அது தொடர்பில் திருப்பதி அடைந்தால்

1)இடைக்கால பாதுகாப்பு உத்தரவு வழங்கப்பட வேண்டும். குறித்த மனு தாக்கல் செய்த தரப்பிற்கு பாதுகாப்பு ஆணையை வழங்குவதற்கு முன் மனுத் தாக்கல் செய்தவர்களிடம் இருந்து பிரமாணப் பத்திரம் (யுககனையஎவைள) கோரலாம். நீதிமன்றம் பிரதிவாதிக்கு 14 நாட்களுக்குள் ஆஜாரவதற்கான அழைப்பானையைஃஅறிவிப்பை (ழேவiஉந) வழங்கும். இடைக்கால பாதுகாப்பு உத்தரவை பிறப்பிக்கும் போதுஇ உடனடி வன்முறைச் செயலைத் தடுக்கவும்இ பாதிக்கப்பட்ட தரப்பினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நீதிமன்றம் அக்கறை கொள்ள வேண்டும். இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவு வழங்கப்படும் வரை பாதுகாப்பு உத்தரவு செல்லுபடியாகும்.

விடயத்துடன் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் ஆஜராகும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றமானது ஆதாரங்களை ஆராய வேண்டும். பிரதிவாதி (சுநளிழனெநவெ) ஆஜராகவில்லை என்றால் குடும்ப வன்முறை ஒப்புக்கொள்ளப்படுகின்றது. எனவே இடைக்கால பாதுகாப்பு உத்தரவிற்கு ஆட்சேபனை வழங்கப்படாது. அல்லது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனில் நிரந்தர பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இந்த பாதுகாப்பு உத்தரவானது மீண்டும் ஏற்படுகின்ற குடும்ப வன்முறைச் செயல்களை தடுக்கும் வகையிலானது. ஏனைய தடையுத்தரவுகள் இதில் சேர்க்கப்பட்டு பாதிக்கப்பட்ட தரப்பினரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யலாம். நிரந்தர பாதுகாப்பு உத்தரவு 12 மாத காலத்திற்குச் செல்லுபடியாகும்.

தடை உத்தரவுகளில் பாதுகாப்பு உத்தரவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தரப்பினரின் இணைப்பு வசிப்பிடங்களில் நுழைவதுஇ பாதிக்கப்பட்ட தரப்பினர் வசிக்கும் வேலையிடங்களுக்குள் அல்லது பாடசாலைகளுக்குள் நுழைவதுஇ பாதிக்கப்பட்ட தரப்பினரின் குழந்தையுடன் சந்திப்பினை மேற்கொள்வது என்பன தடுக்கப்பட்டிருக்கின்றன.

பாதுகாப்பு உத்தரவில் சேர்க்கப்பட்டுள்ள தடையாணைகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் வளங்களை அணுகுவதைத் தடுப்பதுஇ பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உதவும் நண்பர்கள்இ உறவினர்கள்இ சமூக சேவகர்களுக்கு அல்லது ஏனைய நபர் ஓருவருக்கு எதிராக வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல்இ பாதிக்கப்பட்ட தரப்பினரைப் தவறான நோக்கத்தில் பின்தொடர்தல்இ பாதிக்கப்பட்ட தரப்பினரின் பாதுகாப்பில் குறுக்கிடும் எந்தவொரு செயல்களிலும் ஈடுபடுதல்இ திருமண உறவு மூலமான வீட்டை விற்றல்இ மாற்றுதல்இ பரிசளித்தல்இ உரிமத்தினை வேறு எந்த வகையிலும் கையாள்தல் போன்றவற்றினை உள்ளடக்கும்.

முக்கிய விடயங்கள்

பராமரிப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான உரிமைகள் பாதிக்கப்படமாட்டாது என்பதனை கவனத்தில் கொள்க. குறிப்பிட்ட தரப்பினர்களின் வேண்டுகோள்களுக்கு அமையஇ பாதுகாப்பு உத்தரவை மாற்றவோஇ நீட்டிக்கவோ அல்லது நிறுத்தவும் முடியும். விண்ணப்பமானது சுதந்திரமாகவும் தன்னார்வத்துடனும் (ஏழடரவெயசடைல) சமர்ப்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் எந்த சலுகைகளும் வழங்கப்படாது. வாழ்க்கை துணையானது இதற்கான ஒரு சிறந்த சாட்சியமாக கருதப்படும்.

பாதுகாப்பு உத்தரவை எதிர்த்து குறிப்பிட்ட பிராந்தியத்தில் காணப்படும் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும். பாதுகாப்பு உத்தரவை மீறும் சந்தர்ப்பத்தில் ரூபா. 10இ000 அபராதம் அல்லது ஒரு வருடம் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பதோடுஇ இரண்டும் தண்டனைகளும் ஒரே நேரத்திலும் வழங்கப்படலாம். நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிரஇ சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட தரப்பினர்களின் பெயர்கள் அல்லது ஏனைய உண்மைகளை அச்சிடுகின்ற சந்தர்ப்பத்தில் கீழ் நீதிமன்றங்கள் வாயிலாக தண்டனை வழங்கப்பட முடியும்.

Source: Women In Need


Help Us Spread the Word!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன