கணினிக் குற்றம் ஃ இணையவழிக் குற்றம் (சைபர் குற்றம்) தொடர்பாக உங்களுக்கு தெரியுமா?

Help Us Spread the Word!

கணினிக் குற்றம் ஃ இணையவழிக் குற்றம்

கணினிச் சுரண்டல் மற்றும் இணையவழித் துன்புறுத்தல் என்றால் என்ன? இணையம் மூலம் நடாத்தப்படும் துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்தல், அவமானப்படுத்தல், அச்சுறுத்தல்கள்;, ஓரம்காட்டுதல், பாகுபாடு காட்டுதல், வற்புறுத்தல் மற்றும் உணர்ச்சி, மன, உடல், மற்றும் ஆன்மீகம் என்ற அடிப்படையில் வலியை ஏற்படுத்துகின்ற எந்த வடிவமும் கணினிக் குற்றம் அல்லது ஃ இணையவழிக் குற்றம் என அழைக்கப்படும்.

கணினிக் குற்றங்கள் ஃ இணையவழிக் குற்றங்கள் பல தரப்பட்டவை. தீங்கிழைக்கும் வகையில் தட்டச்சு செய்தல், பெற்ற காதல் புகைப்படங்களை அப்புகைப்படத்தில் உள்ளவர்களை அவமானப்படுத்தும் வகையில் மிரட்டுவதற்காக பயன்படுத்தல், மிரட்டல், அப்புகைப்படங்களை பகிர்ந்ததற்கு பதிலடியாக ஆபாச காட்சிகளை விநியோகித்தல், ஆபாச இணையத்தளங்களில் காதல் புகைப்படங்களை பதிவிடுவதல், பணம் வசூல் செய்தல் போன்ற செயல்கள் உள்ளடங்கும்.

கணினி குற்றம் தொடர்பான சட்டம்

1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க திருத்தச் சட்டம், 1998 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க திருத்தச் சட்டம், இலங்கையின் தண்டணைச் சட்ட கோவைக்கு கொண்டுவரப்பட்ட 2006 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க திருத்தச் சட்டம் என்பன கணினி குற்றம் தொடர்பான சட்டங்களாகும். அதற்கமைய தண்டணைச் சட்டக் கோவையின் திருத்தப்பட்ட பிரிவுகளான 286(அ), 286(ஆ), 286(இ) என்பனவற்றின் மூலம் தொடர்புடைய சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு மேலதிகமாக, 1927ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க ஆபாசம் தொடர்பான சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதோடு 1983 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க திருத்தச் சட்டம் மூலம் தொடர்புடைய சட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் தண்டணைச் சட்டக்கோவையின் பிரிவு 360(எ), பிரிவு 372 என்பன கணினி குற்றம் தொடர்பான சட்டமாக பயன்படுத்தப்படுகிறது.

கணினி குற்றத்தை தடுப்பதற்கு இலங்கையில் செயல்படும் அமைப்புக்கள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இந்த குற்றங்களை தடுப்பதில் முதன்மையாக ஈடுபட்டுள்ளது. இவ்வமைப்பானது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதோடு இலங்கை ஊநுசுவு அமைப்புடன் ஒன்றிணைந்துள்ளது மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து இணையத்தில் பாதுகாப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் உலாவுதல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கணினி குற்ற தடுப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கணினி குற்றம் தொடர்பாக முறைப்பாடு அளிக்கும் நிறுவனங்கள்

  • அறை இல.04 பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகம், பௌத்தலோக மாவத்தை, கொழும்பு 07 இலங்கை ஊநுசுவு தொலைபேசி இல. 0112691692
  • பாதிக்கப்பட்டவர் மாணவர் ஒருவராக அல்லது சிறுவர் ஒருவராக இருந்தால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு முறைப்பாடு செய்யலாம். தொலைபேசி இல.1929
  • குற்றப்புலனாய்வுத் துறை, 5 வது தளம், கணினி குற்ற பிரிவு தொகுதி தொலைபேசி இல.0112 422 176 011 320 141- 144 னசை.உனை;pழடiஉந.டம
  • மகளிர் உதவி நிறுவன தலைமை அலுவலகம், இல.25, டிகல் வீதி, பொரளை, கொழும்பு 08 தொலைபேசி இல.2671411

Source: Women In Need


Help Us Spread the Word!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *