போதைப்பொருள் தொடர்பான வன்முறை
பௌத்த கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட பல்கலாச்சார நாடான இந்நாட்டில்; போதைப்பொருள் பயன்பாடு ஒழுக்க சீர்கேட்டிற்கும் தவறான சட்ட விளைவுகளுக்கும் வழிவகுக்கிறது. போதைப்பொருள் உங்களை குற்றவியல் தவறுகளுக்கு இட்டுச்செல்லும். சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி, விநியோகம் மற்றும் பயன்பாடு குற்றவியல் தவறாக இருக்கையில் அத்தகைய போதைப்பொருள் பயன்பாடு காரணமாக இடம்பெறும் வாகன விபத்து, தாக்குதல், கற்பழிப்பு, திருட்டு, பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை போன்றவற்றின் காரணமாக குற்றவாளிகள் மற்றும் குற்றச் செயல்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருதோடு சிறுவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு ஆளாவது நேரடியாக நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும். போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அது தொடர்பான வன்முறைச் செயல்களால் நாட்டின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது.
போதைப் பொருள் பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் தங்கள் விருப்பத்துடன் பாலியல் தொழில் செய்பவர்களாக மாறிய பெண்களும்;;, போதைக்கு அடிமையானவர்களுக்கும் காம வெறிகொண்டவர்களுக்கும் பாலியல் திருப்தியை பெற்றுக்கொள்வதற்காக தங்கள் பெண் குழந்தைகளையும் சிறுவர்களையும் பணத்திற்காக விற்றுக்கும் ஆட்கடத்தல்காரர்கள் தோற்றமும் போதைப்பொருள் தொடர்பாக எழுந்த பாரிய சமூக பிரச்சினையாகும். அதேபோல போதைப்பொருள் பாவனையாளர்கள் பிள்ளைகளுக்கு சரியான கல்வி, ஊட்டச்சத்து, பராமரிப்பு என்பனவற்றை வழங்காமல் குழந்தைகளை கொடுமை செய்வது நடைபெறுகின்றது. குடும்ப பிரச்சினைகள் தோற்றம் பெறுவதற்கு போதைப்பொருள் பாவனை முக்கிய காரணமாகும். ஏனெனில் பிள்ளைகள் மற்றும் வாழ்க்கை துணையை பராமரிப்பு செய்யாமை மற்றும் தாக்குதல்கள், மனிதாபிமானமற்ற உடல் மற்றும் உளவியல் ரீதியான பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக ஏற்படும் ஏராளமான குற்றவியல் வழக்குகளும் மற்றும் விவாகரத்து மற்றும் பாதுகாவலர் போன்ற ஏராளமான குடியியல் வழக்குகளும் நீதித்துறையின் செயல்திறனை பாதிக்கின்றன.
போதைப் பொருள் பாவனை தொடர்பான சட்ட நிலைப்பாட்டை கவனிக்கும் போது 2022 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க நச்சு வகை அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்தப்பட்ட) சட்டம் முக்கியமான சட்டமொன்றாக அடையாளம் காணப்படுகிறது. இச்சட்டத்தின் பிரிவு 54 (அ)(1) மற்றும் 54(ஆ) இன் கீழ் குற்றம் சாட்டப்படும் போதைப்பொருட்களாவன அபின், மார்பின், கொக்கெய்ன், ஹெரோயின், ஐஸ் மற்றும் கஞ்சா ஆகும். மேலும் இச்சட்டத்தின் 52, 54 அல்லது 54(அ)(1) இன் உபபிரிவு (ஆ), (இ), (ஈ) மற்றும் 54(ஆ) ஆகிய பிரிவுகளின் கீழ் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் கூடிய குற்றத்தை செய்த 18 வயதுக்கு குறைந்த ஒருவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படாது நன்னடத்தை கட்டளைச் சட்டத்தின் கீழ் கட்டாய மறுவாழ்வு மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேற்படாத காலத்திற்கு சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார். மேலும் இச்சட்டத்தின் கீழ் குற்றம் செய்தவருக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம். அதேபோல 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க போதைப்பொருளுக்கு அடிமையானவர் (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) தொர்பான சட்டத்தின் உபபிரிவு 10(3) மற்றும் (4) ஆகியவை முக்கியமானவை.
Source : Women In Need